ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

மதுபாட்டில் விற்பனை: 3 பேர்  கைது

கோவில்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை சட்ட விரோதமாக மது விற்பனையில் 

Updated On :

கோவில்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 3  பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த 23 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். 
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பவுல்ராஜ் தலைமையில் போலீஸார் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வேலாயுதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட வடக்கு இலுப்பையூரணி அய்யனார் தெருவைச் சேர்ந்த முத்துசாமி மகன் கருப்பசாமியை (66)  கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த 5  மதுபாட்டில்கள், ரொக்கம் ரூ. 1000 மற்றும் அவர் வைத்திருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 
அதுபோல, மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையில், போலீஸார் ரோந்து சென்றபோது குருமலை விலக்கு அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட அய்யனேரி தெற்கு தெருவைச் சேர்ந்த காளியப்பன் மகன் மணிகண்டனை (33)  கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இளையரசனேந்தல் சாலை மந்தித்தோப்பு கண்மாய்க்கரை அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட கெச்சிலாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த ராஜா மகன் ஆறுமுகச்சாமியை (46)  கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.