சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்! வெற்றி வீடு! பாமணி இல்லத்தில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! நகராமல் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு

கயத்தாறு அருகே லாரி - பைக் மோதல்: இருவர் சாவு

தூத்துக்குடி மாவட்டம்,  கயத்தாறு அருகே ஞாயிற்றுக்கிழமை லாரி - பைக் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

Updated On :

தூத்துக்குடி மாவட்டம்,  கயத்தாறு அருகே ஞாயிற்றுக்கிழமை லாரி - பைக் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
திருநெல்வேலியிலிருந்து கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி கயத்தாறையடுத்த வடக்கு இலந்தைகுளம் விலக்கு அருகே திரும்பும் போது,  திருநெல்வேலியிலிருந்து கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த பைக்கும் - டிப்பர் லாரியும் மோதியதில் பைக்கில் வந்த காரியாப்பட்டி சுகாதாரப் பணியாளர் குடியிருப்பு 3ஆவது தெருவைச் சேர்ந்த ராஜவேல் மகன் ராஜசேகர்(25)  மற்றும்  விருதுநகர் புல்லாலக்கோட்டை சாலையைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் கருணாகரன்(27) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
தகவலறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி. ஜெபராஜ் மற்றும் கயத்தாறு காவல் ஆய்வாளர் ஆவுடையப்பன் ஆகியோர் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து,  லாரி ஓட்டுநர் வடக்கு இலந்தைகுளம் தெற்கு தெருவைச் சேர்ந்த மு.ஈஸ்வரனை (40) கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.