சாத்தான்குளம் அருகே இரு இடங்களில் பெண்களிடம் 15 பவுன் நகை பறிப்பு
சாத்தான்குளம் அருகே வெவ்வேறு இடங்களில் 2 பெண்களிடம் 15 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சாத்தான்குளம் அருகே வெவ்வேறு இடங்களில் 2 பெண்களிடம் 15 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரம் விலக்கு பகுதியைச் சேர்ந்தவர் சிவனேசன் மனைவி சித்திரைபூபதி (45). இவரது கணவர் சென்னையில் காய்கனி கடை நடத்தி வருகிறார். இவர் இங்கு இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சனிக்கிழமை மாலை அங்குள்ள விநாயகர் கோயில் அருகே சென்றபோது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இருவர், முகவரி கேட்பது போல அருகில் வந்து, அவர் கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து கொண்டு தலைமறைவாகினர்.
இதுகுறித்து சித்திரைபூபதி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் ராஜாசுந்தர் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி மனைவி தங்கலதா (45). இவர், அவரது வீட்டருகே பெட்டி கடை நடத்தி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை காலையில் தங்கலதா கடையில் இருந்தபோது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இருவர், பொருள்கள் வாங்குவது போல அருகே வந்து அவர் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க நகையைப் பறித்துக் கொண்டு தலைமறைவாகினர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் வழக்குபதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

