மதுபாட்டில் விற்பனை: 3 பேர் கைது
கோவில்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை சட்ட விரோதமாக மது விற்பனையில்
கோவில்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த 23 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பவுல்ராஜ் தலைமையில் போலீஸார் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வேலாயுதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட வடக்கு இலுப்பையூரணி அய்யனார் தெருவைச் சேர்ந்த முத்துசாமி மகன் கருப்பசாமியை (66) கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த 5 மதுபாட்டில்கள், ரொக்கம் ரூ. 1000 மற்றும் அவர் வைத்திருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அதுபோல, மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையில், போலீஸார் ரோந்து சென்றபோது குருமலை விலக்கு அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட அய்யனேரி தெற்கு தெருவைச் சேர்ந்த காளியப்பன் மகன் மணிகண்டனை (33) கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இளையரசனேந்தல் சாலை மந்தித்தோப்பு கண்மாய்க்கரை அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட கெச்சிலாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த ராஜா மகன் ஆறுமுகச்சாமியை (46) கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

