தூத்துக்குடியில் இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து, தூத்துக்குடி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில், சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நடேஷ்குமார் தலைமை வகித்தார்.
கட்சியின் மாநில துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம், பேரவை முன்னாள் உறுப்பினர் எஸ். டேனியல்ராஜ், மாநகர முன்னாள் செயலர் அருள், முன்னாள் கவுன்சிலர்கள் சந்திரபோஸ், கந்தசாமி, செல்வராஜ் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.