பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

தாமிரவருணியில் வெள்ளப் பெருக்கு: சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறப்பு

தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து சடையனேரி கால்வாயில் புதன்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து சடையனேரி கால்வாயில் புதன்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம், உடன்குடி பகுதி வானம் பார்த்த பூமி என்பதால் இப்பகுதியில் குளத்துப் பாசனம் மற்றும் கிணற்றுப் பாசனம்  மூலமே விவசாயம் நடந்து வருகிறது. இப்பகுதியின் பெரிய நீர்ப்பிடிப்புக் குளங்களான புத்தன்தருவை, வைரவம் தருவை, படுக்கப்பத்து தருவை உள்ளிட்ட பல குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் விவசாயம் எதிர்பார்த்த அளவு இல்லாத நிலையில், கிராமங்களில் குடிநீர் பிரச்னையும் ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில், தற்போது தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து சுமார் 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக கடலுக்குச் சென்று வருகிறது. இத்தண்ணீரை சடையனேரி கால்வாயில் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி ஆலோசனையின்பேரில், மாவட்ட பாஜக துணைத் தலைவர் செல்வராஜ், மாவட்டச் செயலர் சிவமுருகன் ஆதித்தன், ஆழ்வார்திருநகரி  ஒன்றிய பொறுப்பாளர் நடராஜன், சாத்தான்குளம் நகரத் தலைவர் ராம்மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராம்குமார் உள்ளிட்ட பாஜகவினர் மாவட்ட  ஆட்சியர் சந்தீப் நந்தூரியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவின்பேரில், சடையனேரி கால்வாயில் தண்ணீர்  திறந்து விடப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட பாஜக துணைத் தலைவர் செல்வராஜ் கூறுகையில், சடையனேரி கால்வாயில் தற்போது 500 கனஅடி வரை தண்ணீர் வருகிறது.  புத்தன்தருவை குளம் நிரம்பும் வரை தண்ணீரை திறந்து விட வேண்டும். இதன்மூலம்  இப்பகுதியில் விவசாயம் செழிப்படைவதுடன், கிராமங்களில் குடிநீர் பிரச்னையும் தீரும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.