
திமுக சார்பில் ஏரலில் நாளை பாடல் ஒப்பித்தல் போட்டி
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 110ஆவது பிறந்த தினத்தையொட்டி, திமுக சார்பில் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி, ஏரலில் இம்மாதம் 18ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 110ஆவது பிறந்த தினத்தையொட்டி, திமுக சார்பில் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி, ஏரலில் இம்மாதம் 18ஆம் தேதி நடைபெறுகிறது.
திமுகவின் முரசொலி அறக்கட்டளை ஏற்றுநடத்தும் இப்போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
முதற்கட்டமாக மாவட்டம் முழுவதும் போட்டிகள் நடக்கின்றன. அதன்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க.வும், இலக்கிய அணியும் இணைந்து சனிக்கிழமை (ஆக. 18) காலை 9 மணிக்கு ஏரல் ஜெ.ஜெ. திருமண மண்டபத்தில் போட்டி நடைபெறும்.
இதில், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ. 3,000, மூன்றாம் பரிசாக ரூ. 2,000, ஆறுதல் பரிசாக 5 பேருக்கு தலா ரூ. 1500 வழங்கப்படும். போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் பரிசுப்பொருள் வழங்கப்படும்.
எனவே, மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





