/

ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் முற்றுகை

சீர்மரபினர் தொடர்பான அரசாணையை ரத்து செய்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டத்தில் சட்டமன்ற

Updated On :30 ஜனவரி 2024, 10:02 pm IST

சீர்மரபினர் தொடர்பான அரசாணையை ரத்து செய்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சீர்மரபினர் நலச் சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
சீர்மரபினர் தொடர்பாக கடந்த 1979ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து டீஎன்டி இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என வலியுறுத்தி சீர்மரபினர் நலச்சங்கத்தினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 
இந்நிலையில், சீர்மரபினரின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சீர்மரபினர் நலச் சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீர்மரபினர் நலச்சங்க மாநில அமைப்புச் செயலர் ஸ்ரீரெங்கன் தலைமை வகித்தார்.   மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரன், மாநில மாணவரணிச் செயலர் சீனிபாண்டியன், மாவட்ட பொதுச்செயலர் புதுகைராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் வீரா, நெல்லை மாவட்டச் செயலர் பேச்சிமுத்து, நெல்லை மாணவரணிச் செயலர் குமார், நெல்லை மாவட்ட இளைஞரணிச் செயலர் நாராயணன், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலர் பசும்பொன் உள்பட 11பேரையும் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.