
அரசு மருத்துவமனையில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கோவில்பட்டியில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கோவில்பட்டியில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் (காசம்) சுந்தரலிங்கம் தலைமை வகித்துப் பேசினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன், நிலைய மருத்துவ அலுவலர் பூவேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் ராஜகோபாலன் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், அங்கன்வாடி பணியாளர்கள் காசநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், ரோட்டரி கிளப் செயலர் ரவிமாணிக்கம், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சண்முகசுந்தரி, அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் மோகன், ஆய்வக நுட்பநர் ராமலட்சுமி, ராஜகுமாரி, காசநோய் பார்வையாளர் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்கத் தலைவர் ஆசியா பார்ம்ஸ் பாபு வரவேற்றார். மாவட்ட நலக் கல்வியாளர் (காசம்) தங்கவேல் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை கடம்பூர் காசநோய் அலகு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசிவிஸ்வநாதன் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




