அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினரின் காலவரையற்ற வேலைநிறுத்ததை செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.
இதையடுத்து, கோவில்பட்டி கோட்டத்துக்குள்பட்ட 148 துணை அஞ்சலகங்கள் மூடப்பட்டன.
கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான அறிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பணிக்கொடை உச்சவரம்பு ரூ.1லட்சத்து 50 ஆயிரத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். பணிமாறுதல் வரையறை தளர்த்தப்பட வேண்டும். ஆண்டுக்கு 30 நாள்கள் ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும். 8 மணி நேரம் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, 587 கிராமிய அஞ்சல் ஊழியர்களில் 355 பேர் பணிக்குச் செல்லவில்லை. 280 துணை அஞ்சலகங்களில் 148 துணை அஞ்சலகங்கள் மூடப்பட்டன.
ஆர்ப்பாட்டம்:
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க கோவில்பட்டி கோட்டத் தலைவர் ஜெயராஜ் தலைமை வகித்தார். செயலர் பிச்சையா முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த மருததுரை, கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமேசான் சுதந்திர தின சலுகை! என்னென்ன வாங்கலாம்?

முதல்முறையாக இணையும் அஜித் குமார் - ஷங்கர் கூட்டணி?

அபிஷேக் பானர்ஜி வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி!

ஐசிசியின் ஜூலை மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியாளர்கள் அறிவிப்பு!
விடியோக்கள்

"நான் அப்படித்தான் பேசுவேன்; உங்களுக்காக மாத்திக்க முடியாது!" மரிய வில்சன் ஆவேசம்!


