கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்:  148  துணை அஞ்சலகங்கள் மூடல்

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினரின் காலவரையற்ற வேலைநிறுத்ததை செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினரின் காலவரையற்ற வேலைநிறுத்ததை செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.
இதையடுத்து, கோவில்பட்டி கோட்டத்துக்குள்பட்ட 148 துணை அஞ்சலகங்கள் மூடப்பட்டன. 
கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான அறிக்கையை  உடனடியாக அமல்படுத்த வேண்டும்.  பணிக்கொடை உச்சவரம்பு ரூ.1லட்சத்து 50 ஆயிரத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். பணிமாறுதல் வரையறை தளர்த்தப்பட வேண்டும்.  ஆண்டுக்கு 30 நாள்கள் ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும்.  8 மணி நேரம் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  
இதையடுத்து, 587  கிராமிய அஞ்சல் ஊழியர்களில் 355  பேர் பணிக்குச் செல்லவில்லை. 280  துணை அஞ்சலகங்களில் 148  துணை அஞ்சலகங்கள் மூடப்பட்டன. 
ஆர்ப்பாட்டம்: 
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க கோவில்பட்டி கோட்டத் தலைவர் ஜெயராஜ் தலைமை வகித்தார். செயலர் பிச்சையா முன்னிலை வகித்தார். 
ஆர்ப்பாட்டத்தில், கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த மருததுரை, கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.