மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

தெருக்களில் குப்பைகளை கொட்டாதீர்கள்: மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் தெருக்களில் குப்பைகளை வீசுவோர் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :25 டிசம்பர் 2018, 7:22 am IST

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் தெருக்களில் குப்பைகளை வீசுவோர் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தூத்துக்குடி மாநகராட்சியால் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.  பழைய நடைமுறைகளின் படி நகரில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டிகளில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டியும் பெரும்பாலானார் குப்பைத் தொட்டிகளை சுற்றியும் வீசி எறிந்து வருவதால் தொடர்ந்து குப்பைகள் அள்ளப்பட்டாலும் அந்தப் பகுதி எப்பொழுதும் குப்பைகளாகவே காட்சி அளிக்கிறன.
பொதுமக்கள் குப்பைத் தொட்டிகளை தேடிச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாத வகையில் வாகனங்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் தினமும் சென்று குப்பைகளை பிரித்து சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால்,  மாநகரில் உள்ள குப்பைத் தொட்டிகளை அகற்றி குப்பைத் தொட்டியில்லா நகரமாக தூத்துக்குடி மாநகராட்சி அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 எனவே,  பொதுமக்கள் மற்றும் வியாபார பெருமக்கள் தங்கள் வசம் சேரும் குப்பைகளை தங்கள் வீடுகளில் குப்பைக் கூடை வைத்து பிரித்துக் கொடுக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  வணிக  நிறுவனங்கள் கண்டிப்பாக இரண்டுவித கூடைகள் வைத்து மாநகராட்சி வாகனங்கள் வரும் போது மட்டுமே குப்பைகளை கொடுக்க வேண்டும் எந்தக் காரணம் கொண்டும் குப்பைகளை தெருக்களில் சுத்தம் செய்து தள்ளவோ காலிமனை மற்றும் பொது இடங்களில் வீசவோ கூடாது.
எனவே,  தங்கள் பகுதிக்கு வாகனங்கள் ஏதும் வரவில்லை என்றாலோ, தங்கள் பகுதிகளில் யாரோனும் குப்பைகளை தெருக்களில் விசி எறிந்தாலோ 917397731065 என்ற  மாநகராட்சியின் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்)  எண்ணில் தகவல் அளிக்கலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.