அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்புதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

மாவட்ட கால்பந்து: கோவில்பட்டி அணி முதலிடம்

தூத்துக்குடி மாவட்ட ஐவர் கால்பந்துப் போட்டியில் கோவில்பட்டி அணி முதலிடம் பெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 11:31 pm IST

தூத்துக்குடி மாவட்ட ஐவர் கால்பந்துப் போட்டியில் கோவில்பட்டி அணி முதலிடம் பெற்றது.
 கோவில்பட்டி கால்பந்துக் கழகத்தின் சார்பில் மாவட்ட அளவில் ஆர்.பி.சண்முகையா நினைவு 30ஆவது ஆண்டு கால்பந்துப் போட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
போட்டியில் கோவில்பட்டி, வானரமுட்டி, எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், கழுகுமலை, திட்டங்குளம் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து 10 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில், கோவில்பட்டி கால்பந்துக் கழக அணி, திட்டங்குளம் கால்பந்துக் கழக அணி மோதின. இதில், 2-1 என்ற கோல் கணக்கில் திட்டங்குளம் அணியை கோவில்பட்டி கால்பந்துக் கழக அணி வென்றது.
முன்னதாக நடைபெற்ற போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் மணியாச்சி கால்பந்துக் கழக அணி 3 ஆவது இடம் பெற்றது. போட்டியின் நடுவர்களாக ராஜா, மனோ ஆகியோர் செயல்பட்டனர். பின்னர், நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, கோவில்பட்டி கால்பந்து அணி கேப்டன் மகேஷ் விநாயகம் தலைமை வகித்தார். கால்பந்துக் கழக உறுப்பினர் அக்சரன் முன்னிலை வகித்தார். கால்பந்துக் கழகச் செயலர் தேன்ராஜா வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். இதில், கால்பந்துப் பயிற்சியாளர் முருகேசன், கால்பந்துக் கழக உறுப்பினர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கால்பந்துக் கழக உறுப்பினர் சுபாஷ் ராஜா வரவேற்றார். ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.