இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தூத்துக்குடி புனித லூர்து அன்னை ஆலயத் திருவிழா

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 2:54 am

DIN

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி லூர்த்தம்மாள்புரத்தில் அமைந்துள்ள புனித லூர்து அன்னை ஆலயத் திருவிழா கடந்த மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. முக்கிய நிகழ்வான ஆலய திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை 6.45 மணிக்கு திருப்பலி நிறைவேற்றி கொண்டாடப்பட்டது. 
மறைமாவட்ட முதன்மைக் குரு ரோலிங்டன் தலைமையில் நடைபெற்ற திருவிழா திருப்பலியில் பல்நோக்கு சமூக சேவை சங்க இயக்குநர் பெஞ்சமின் டிசூசா, மறைமாவட்ட கத்தோலிக்க பள்ளிகளின் கண்காணிப்பாளர் டொமினிக் அருள்வளன், ஆலய பங்குத்தந்தை பிராங்கிளின் உள்ளிட்ட பங்குத் தந்தைகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கு மக்களும் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, 6 மணிக்கு செபமாலை, நற்கருணை ஆசிரும் தொடர்ந்து கொடியிறக்கும் நிகழ்வும் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு அன்பியங்கள் இணைந்து வழங்கிய கலைவிழா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.