கோவில்பட்டியில் போக்குவரத்து காவல் துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ் தலைமை வகித்தார்.
மோட்டார் வாகன ஆய்வாளர் அமர்நாத், காவல் துறை ஆய்வாளர் பவுல்ராஜ், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சுடலைமுத்து மற்றும் கோவில்பட்டி நகர மற்றும் சுற்று வட்டார ஆட்டோ ஓட்டுநர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் சீருடை அணிந்து ஆட்டோக்களை இயக்கவேண்டும். ஆட்டோவை அதிவேகமாக ஓட்டிச் செல்லக் கூடாது. நகருககுள் அதிகம் ஒலி தரும் ஒலிப்பான்களை உபயோகிக்கக் கூடாது. ஆட்டோவில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடாது.
குறிப்பாக, அதிகமான பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லக் கூடாது. ஆட்டோவை நகருக்குள் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்த வேண்டும் ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் போக்குவரத்து சாலை விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றார். எனவே, அனைத்து வாகனங்களுக்கும் முறையாக சட்ட விதிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும், கோவில்பட்டி ரயில் நிலையத்திற்குள் முறையான அனுமதி ஏதுமின்றி சிற்றுந்துகள் பயணிகளை ஏற்றிச் செல்வதாகவும், அதைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்த மோட்டார் வாகன ஆய்வாளர் அமர்நாத் தங்கள் புகார்களை எழுத்துப்பூர்வமாக அளித்தால் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆமைகள் மூலம் பண்டைய கடல் வழித்தடங்களை கண்டறியலாம்: வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு

சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: சென்னைக்கு மாற்றி உத்தரவு

மெட்ரோ ரயிலில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றவா் மீட்பு

ரூ.53.18 லட்சம் தங்கப் பசை பறிமுதல்: விமான நிலை ஊழியா் கைது
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


