தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில், மக்களவைத் தேர்தல் பணிகள் குறித்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, மாவட்டச் செயலர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர்கள் மோகன், தங்கமாரியப்பன், பொருளாளர் ஜெபமாலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சரும், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலருமான கடம்பூர் செ. ராஜு கலந்து கொண்டு பேசினார். மக்களவைத் தேர்தலை சந்திக்க அனைத்து நிர்வாகிகளும் தயாராக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தின்போது, அதிமுக அரசின் சாதனைகளை கிராமங்கள் தோறும் கொண்டுச் சென்று பிரசாரம் செய்வது என்றும், மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1593 வாக்குச்சாவடிகளிலும் பூத் முகவர் குழு அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்களவை உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, மாநில இளைஞர் இளம் பெண்கள் பாசறை துணைச் செயலர் என். சின்னத்துரை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பிடிஆர் ராஜகோபால், முன்னாள் வாரியத் தலைவர் இரா. அமிர்தகணேசன், மாவட்ட வழக்குரைஞர் அணி செயலர் யு.எஸ். சேகர், மேற்கு பகுதிச் செயலர் ஏ. முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுங்கச்சாவடியை இடமாற்றக் கோரி வாகன ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

தொழிலாளி கொலை: சகோதரா்கள் இருவா் கைது
அனுமதியின்றி எம் சாண்ட் ஏற்றி வந்த லாரி பறிமுதல்: ஒருவா் கைது

கொலம்பியா அதிபா் தோ்தல்: வலதுசாரி வேட்பாளா் வெற்றி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


