கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் கட்டடத் தொழிலாளிகள் இருவர் இறந்தார்.
கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோயில் தெரு சண்முகா நகரைச் சேர்ந்தவர் மூக்கையா மகன் கட்டடத் தொழிலாளி செல்வராஜ் (36). இவரது உறவினர் கருப்பசாமி மகன் கட்டடத் தொழிலாளி ஆதிராம் (25). இவர்கள் இருவரும் தனித்தனியாக பைக்குகளில் மந்தித்தோப்பு கெச்சிலாபுரம் விலக்கு அருகே கொடை விழாவிற்காக ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சென்று கொண்டிருந்தார்களாம்.
குருமலை சாலை மயானம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே 3 பேருடன் பைக்கை ஓட்டி வந்த ஊத்துப்பட்டி ஆர்.சி தெருவைச் சேர்ந்த கலைச்செல்வன் மகன் கட்டடத் தொழிலாளி ஜனார்த்தனபாண்டி (18) ஓட்டி வந்த பைக்கும், ஆதிராம் ஓட்டி வந்த பைக்கும் நேருக்குநேர் மோதின.
இதில் ஆதிராம், ஜனார்த்தனபாண்டி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு இருவரும் இறந்தனர்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








