அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு யாகம்
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக் கோயிலில் அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர், மாணவிகளுக்கான சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.


கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக் கோயிலில் அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர், மாணவிகளுக்கான சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.
இதையொட்டி கோயில் நடை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னர், கோயில் வளாகத்தில் கணபதி பூஜை, கும்ப கலச பூஜை நடைபெற்றது.
பின்னர் யாகசாலை பூஜை, சரஸ்வதி மூலமந்திர ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றன. தொடர்ந்து, அரசுப் பொதுத் தேர்வு எழுதும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர், மாணவிகள் கலந்துகொண்டு, தேர்வை சிறப்பாகவும், ஞாபகசக்தியுடன் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
சுவாமி, அம்பாளுக்கு 18 வகையான மூலிகைகள் கொண்ட சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கோயில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணி உள்பட திரளான பக்தர்கள், மாணவர், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...