தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்தி
/

என்னுடைய பாரதம் பொன்னான பாரதம்' செயல்திட்ட பேருந்து கண்காட்சிக்கு தூத்துக்குடியில் வரவேற்பு

பிரம்மாகுமாரிகள் அமைப்பின் துணை இயக்கமான ராஜயோகக் கல்வி அறக்கட்டளை சார்பில், மேற்கொள்ளப்பட்டுள்ள என்னுடைய பாரதம், பொன்னான பாரதம் செயல்திட்ட பேருந்து கண்காட்சிக்கு தூத்துக்குடியில்

News image
Updated On :14 மே 2018, 7:17 pm

DIN

பிரம்மாகுமாரிகள் அமைப்பின் துணை இயக்கமான ராஜயோகக் கல்வி அறக்கட்டளை சார்பில், மேற்கொள்ளப்பட்டுள்ள என்னுடைய பாரதம், பொன்னான பாரதம் செயல்திட்ட பேருந்து கண்காட்சிக்கு தூத்துக்குடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்தின் துணை இயக்கமான ராஜயோயகக் கல்வி மற்றும் அறக்கட்டளையின் சார்பில், தேசிய அளவிளான என்னுடைய பாரதம் பொன்னான பாரதம் செயல் திட்ட பேருந்து கண்காட்சி பிரசாரம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது.
இளைஞர்களிடையே நல்ல குணங்களையும் மற்றும் ஆன்மிக பண்புகளையும், ராஜயோக தியானத்தின் மூலமாக வளர்ப்பது. சுத்தமான இந்தியா - ஆரோக்கியமான இந்தியாவுக்கான இளைஞர்களை ஊக்கப்படுத்துவது.
ஆக்கப்பூர்வமான முறையில் நல்லதொரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தலைமை பொறுப்பை இளைஞர்களிடையே அதிகரிக்க உந்துதலாக இருப்பது என்பதே இந்த பிரசாரத்தில் நோக்கம்.
அதன்படி, எனது பாரதம் பொன்னான பாரதம்' கண்காட்சி பேருந்து தூத்துக்குடிக்கு அண்மையில் வந்தடைந்தது. தூத்துக்குடி 3 ஆவது மைல் பகுதியில் இருந்து தொடங்கி பேருந்து கண்காட்சி வேம்படி இசக்கியம்மன் கோயில். அரசு மருத்துவமனை, பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள், முத்துநகர் கடற்கரை உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, நடைபெற்ற எனது பாரதம் பொன்னான பாரதம் - அகில இந்திய கண்காட்சி பேருந்து பேரணியின் வரவேற்பு விழா நிகழ்ச்சியில், திட்டத்தின் செயலர் பிரம்மாகுமாரி சந்திரிகா தீதி சிறப்புரையாற்றினார்.
மதுரை துணை மண்டல ஒருங்கிணைப்பாளர் உமா, வஉசி பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் ரங்கநாதன், தேசிய மாணவர் படை கட்டளை அதிகாரி வெற்றிவேல், தொழிலதிபர் மஞ்சு சிங்வி, வஉசி கல்லூரி இயக்குநர் நெல்லைமுருகன், பிரம்மகுமாரிகள் அமைப்பு தூத்துக்குடி பிரிவு பொறுப்பாளர் அருணா, துணை பொறுப்பாளர் அருணாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.