தூத்துக்குடியில் கருவூல அலுவலர்களுக்கு கணினி மயமாக்கப்பட்ட பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் கீழ், கருவூலத்துறை பணியாளர்கள் மற்றும் இதர பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு திறனூட்டல் பயிற்சி முகாம் வஉசி கல்வியில் கல்லூரியில் திங்கள்கிழமை தொடங்கியது.
நிதி மேலாண்மை தொடர்பான அரசுப் பணிகள் திறம்பட நடைபெற, மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மாநில அரசு மனித வள மேலாண்மையை இணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. பயிற்சி முகாமை தொடங்கி வைத்த ஆட்சியர் என். வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் கூறியது:
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தூத்துக்குடி மவாட்டம் முழுவதும் உள்ள 445 பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் நேரடி இணையத்தின் மூலம் ஊதிய பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பிக்க இயலும். மாவட்டத்தில் ஏறத்தாழ 25,230 அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினிமயமாக்கப்பட்டு சம்பளப்பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விவரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பதியப்படும். மே 26 ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படும் என்றார் அவர்.
பரிசு அளிப்பு: தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 2016-2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற கரிசல்குளம், ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் ஜே. கோபால் மற்றும் திருமங்கலகுறிச்சி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பே. முருகன் ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் நினைவு பரிசுகளை ஆட்சியர் வழங்கினார்.
மேலும், கரிசல்குளம், ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) கே.பரமசிவன் மற்றும் பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) எம். ஜெகன், திருமங்கலக்குறிச்சி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பி.ராமநாதன், பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) எம்.ஜெயராஜ், பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) கே.காமராஜ் ஆகிய 5 ஆசிரியர்களுக்கு தலா ரூ.5 ஆயிரத்திற்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார்.
இதேபோல, 2017-18 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 21 ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு நினைவுப்பரிசுகளை, அந்த விடுதிகளின் காப்பாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நூறு கோடி பேர் பார்த்த காணொலி

எல்.இ.டி. வரலாற்றில் மறக்கக் கூடாத லோசெவ்

பசுமை மனிதர்...
சிரி... சிரி...
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

