கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா புதன்கிழமை (அக்.24) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெறும்.
அதையடுத்து, சுவாமி, அம்பாளுக்கும், பஞ்சமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகளும், தொடர்ந்து 5.30 மணிக்கு மேல் கொடியேற்ற நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெறும். இரவு 7.30 மணிக்கு புஷ்ப சப்பரத்தில் அம்மன் திருவீதியுலா நடைபெறும்.
திருவிழா நாள்களில் தினமும் காலை மற்றும் இரவில் அம்மன் பல்வேறு வாகனத்தில் திருவீதியுலா நடைபெறும். 9ஆம் திருநாளான நவம்பர் 1ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வணிக வைசிய சங்கத்தினர் சார்பில் தேரோட்டமும், இரவு 8 மணிக்கு அன்ன வாகனத்தில் அம்பாள் வீதியுலாவும் நடைபெறும். 12ஆம் திருநாளான நவம்பர் 4ஆம் தேதி காலை 8 மணிக்கு பல்லக்கில் அம்பாள் திருவீதியுலா நடைபெறும். மாலை 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறும். அதைத் தொடர்ந்து, சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் பட்டணப் பிரவேசம் நடைபெறும்.
திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி, கோயில் முன்பு அமைந்துள்ள பிராமண மகாசபை காயத்ரி மண்டபத்தில் அன்னதானம் நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ரோஜாலிசுமதா, செயல் அலுவலர் பாலசுப்பிரமணியராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காணாமல் போன குழந்தைகள் மீட்டெடுக்க சட்ட தன்னாா்வ தொண்டா்களுக்கு அழைப்பு

சங்கப் புலவா் நல்லூா் நத்தத்தனாா் நினைவுத் தூணுக்கு ஆட்சியா் மரியாதை
சுட்டெரிக்கும் சூரியன்!

புத்த பூர்ணிமா - அன்பின் நிறைவு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

