வட்டார தடகள விளையாட்டுப் போட்டியில் பிரகாசபுரம் புனித மரியன்னை நடுநிலைப் பள்ளி மாணவர், மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வட்டார அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பிரகாசபுரம் புனித மரியன்னை நடுநிலைப் பள்ளி மாணவர் கந்தகணேஷ் நீளம் தாண்டுதலில் முதலிடத்தையும், மாணவிஅன்னம்மாள் 2ஆவது இடத்தையும், மாணவி லெட்சுமி மாருதி 3ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
குண்டு எறிதலில் மாணவி யோக லட்சுமி முதலிடத்தையும், மாணவி அன்னம்மாள் 2ஆவது இடத்தையும், மாணவி வைஷ்ணவி 3ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர். 200 மீ. ஓட்டப்பந்தயத்தில் மாணவர் ஆனந்தராஜன் 3ஆவது இடத்தையும், 100 மீ. ஓட்டப்பந்தயத்தில் மாணவி செல்வகவிதா 3ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவர், மாணவிகளை பிரகாசபுரம் பரிசுத்த பரலோக மாதாஆலய பங்குத்தந்தையும், பள்ளித் தாளாளருமான அந்தோணி இருதய தோமாஸ், தலைமைஆசிரியை பாக்கியம் மற்றும் ஆசிரியைகள், அலுவலர்கள் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிலிண்டர் ஜிஎஸ்டி வரியை 5%-ஆக குறைக்க ஹோட்டல் சங்கம் கோரிக்கை

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் ஏழூர் சப்தஸ்தான புறப்பாடு விழா!

வாக்கு எண்ணும் பணியாளர்களை தேர்தல் ஆணையமே தேர்ந்தெடுக்கலாம்: உச்ச நீதிமன்றம்

6 ரன்கள் தேவையானபோது 6 யார்க்கர் பந்துகளை வீசிய இளம் பாகிஸ்தான் வீரர்..! யார் இந்த ஹுனைன் ஷா?
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

