எட்டயபுரம் வட்டம், வேலிடுபட்டி கிராமத்தில் காலியாக உள்ள கிராம பணியாளர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை திரண்டனர்.
வேலிடுபட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த சுமதி, சிங்கிலிப்பட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். அதையடுத்து, வேலிடுபட்டி கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. எனவே, சிங்கிலிபட்டி கிராம நிர்வாக அலுவலரை கூடுதலாக வேலிடுபட்டி கிராம நிர்வாக அலுவலகப் பணியையும் கவனிக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் அயன்வடமலாபுரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அ.வரதராஜன் தலைமையில், அப்பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டனர்.
பின்னர், கோரிக்கை மனுவை உதவியாளர் பாலுவிடம் அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அவர், தங்கள் கோரிக்கை மனுவை கோட்டாட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றும் நாளையும் புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம்
விசிலுக்குப் பதில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட செங்கோட்டையன்! பிரசாரத்தில் குழப்பம்

கேதார்நாத்தில் கடும் பனிப்பொழிவு - புகைப்படங்கள்

டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

