சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

தூத்துக்குடியில் 2 இடங்களில் கூட்டுறவு சிறப்பு அங்காடி திறப்பு

தூத்துக்குடியில் இரண்டு இடங்களில் தரம் உயர்த்தப்பட்ட கூட்டுறவு சிறப்பு அங்காடிகள்  புதன்கிழமை திறக்கப்பட்டன.

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

தூத்துக்குடியில் இரண்டு இடங்களில் தரம் உயர்த்தப்பட்ட கூட்டுறவு சிறப்பு அங்காடிகள்  புதன்கிழமை திறக்கப்பட்டன.
 தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட போல்பேட்டை, புதிய துறைமுகம் ஆகிய  பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகள் சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அந்த அங்காடிகள் திறப்பு விழா  நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சிகளில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ கலந்து கொண்டு, சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகளை திறந்துவைத்து, விற்பனையைத் தொடக்கிவைத்தார். அப்போது, பொது மக்கள் அதிகளவில் சிறப்பு அங்காடிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
 நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அருளரசு, துணைப் பதிவாளர்கள் சிவகாமி,  கோமதி நாயகம், ரவிச்சந்திரன், கூட்டுறவு பண்டகசாலை மேலாண்மை இயக்குநர் சுப்பிரமணியன், வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநர் சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.