
மின்னணு குடும்ப அட்டை திருத்தப் பணி: நாளை சிறப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் சனிக்கிழமை (செப். 8) நடைபெறும் சிறப்பு முகாமில் மின்னணு குடும்ப
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் சனிக்கிழமை (செப். 8) நடைபெறும் சிறப்பு முகாமில் மின்னணு குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நீக்குதல், சேதமடைந்துள்ள அல்லது தொலைந்துபோன மின்னணு குடும்ப அட்டைக்கு புதிய மின்னணு அட்டை பெறுதல் போன்ற குறைகள் முகாமிலேயே உடனுக்குடன் சரிசெய்து வழங்கப்படும்.
மேலும், மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தரவுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் தேவையெனில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த முகாமில் பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





