செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

காமராஜர் விருது பெற்ற மாணவிக்கு பாராட்டு

தமிழக அரசின் சார்பில் காமராஜர் விருது பெற்ற கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவி மெளனிகாவுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

Published On :

தமிழக அரசின் சார்பில் காமராஜர் விருது பெற்ற கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவி மெளனிகாவுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
 ஒவ்வொரு கல்வியாண்டிலும் கல்வி மற்றும் தனித்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெறும், தமிழ் வழியில் பயிலும் மாணவ மாணவியருக்கு காமராஜர் விருது வழங்கி தமிழக அரசு சிறப்பித்து வருகிறது. அதன்படி, 2017 - 2018ஆம் கல்வியாண்டிற்கான காமராஜர் விருது மாணவி மெளனிகாவுக்கு கிடைத்துள்ளது. சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் மெளனிகா தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையைப் பெற்றார்.
இந்த மாணவியை நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிசெல்வம், துணைத் தலைவர் செல்வராஜ், சங்கச் செயலர் ஜெயபாலன், பள்ளிச் செயலர் ஆர்.எஸ். ரமேஷ், பள்ளியின் பொருளாளர் சண்முகராஜா, தலைமையாசிரியர் வடிவேல் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள்,  ஆசிரியர்கள் பாராட்டினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.