
தூத்துக்குடியில் பெண் மதபோதகர் மர்மச் சாவு
தூத்துக்குடியில் உள்ள கிறிஸ்தவ சபையில் சென்னையைச் சேர்ந்த பெண் மதபோதகர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடியில் உள்ள கிறிஸ்தவ சபையில் சென்னையைச் சேர்ந்த பெண் மதபோதகர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை, ஆவடியைச் சேர்ந்த பாஸ்கர் மகள் நித்யா (23). இவர், தூத்துக்குடி, மில்லர்புரத்தில் உள்ள சபை ஒன்றில் தங்கியிருந்து, போதனைப் பணியில் ஈடுபட்டிருந்தாராம்.
இந்நிலையில், சபை இல்லத்தில் அவர் செவ்வாய்க்கிழமை இரவு மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவரது சாவில் சந்தேகமுள்ளதாக, சபையின் சக பெண் போதகர்கள் புகார் தெரிவித்ததால் சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நித்யா கீழே விழுந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்தது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





