விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

பாரதியார் நினைவு தினம்: சிலைக்கு மாலை அணிவிப்பு

எட்டயபுரத்தில் பாரதியாரின் 97ஆவது நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

Published On :

எட்டயபுரத்தில் பாரதியாரின் 97ஆவது நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
பாரதியார் நினைவு அறக்கட்டளை, கோவில்பட்டி ரோட்டரி சங்கம் ஆகியன சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்கத் தலைவர் பாபு தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன், ரோட்டரி சங்கச் செயலர் ரவி மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்து பள்ளி, மாரியப்ப நாடார் நடுநிலைப் பள்ளி, கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளி மாணவர், மாணவிகள் 97 பேர் பாரதி வேடம் அணிந்து வந்து,  பாரதி மணிமண்டபத்தில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், பாரதியின் கருத்துகளை இன்றைய தலைமுறையினரிடம் பரப்புவது; வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்துவது; நதிநீர் இணைப்பை வலியுறுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து  அவர்கள் உறுதிமொழி ஏற்றனர். 
தொடர்ந்து இளம் பாரதிகள் ஊர்வலத்தை, ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் சின்னத்துரை அப்துல்லா தொடங்கிவைத்தார்.  பாரதியின் பாடல்களை பாடியவாறு மணிமண்டபத்திலிருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம், எட்டயபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பாரதி பிறந்த இல்லத்தில் நிறைவடைந்தது. அங்குள்ள பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பெண் கல்வி, பெண் விடுதலை, பெண்கள் முன்னேற்றம் குறித்து கவியரங்கம் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
நிகழ்ச்சியில், வட்டாட்சியர் வதனாள், பாரதி ஆய்வாளர் இளசை மணியன், பாரதி இல்ல காப்பாளர் செ. மகாதேவி, பாரதி மணிமண்டப வழிகாட்டி பினோ,  பாரதி அன்பர் பொன் பரமானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி பள்ளியில்...
தூத்துக்குடி அமிர்தா வித்யாலயத்தில் பாரதியார் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் வித்யா சங்கர் தலைமை வகித்தார். விழாவின்போது, பாரதியாரின் கவிதைகள் மற்றும் பாடல்களை மாணவர், மாணவிகள் பாடினர். மேலும், பாரதியார் வேடமணிந்த மாணவர், மாணவிகள் அவரது பாடலுக்கு நடனமாடினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.