சாத்தான்குளம் டி.எஸ்.பி.யை கண்டித்து அதிமுகவினர் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதா பிறந்ததினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் காவல்துறை, பேரூராட்சியில் அனுமதிபெற்று சாத்தான்குளம்
பஜாரில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. சாத்தான்குளம் டி.எஸ்.பி. பாலச்சந்திரன், அதிமுக நிர்வாகிகளை செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு விளம்பரப் பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில் அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்தாராம்.
இதையடுத்து, விளம்பரப் பதாதைகள் அகற்றப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை ஜெயலலிதா பிறந்ததினத்தையொட்டி, அங்கு வந்த அதிமுகவினர், ஒன்றியச் செயலர் அச்சம்பாடு த. சவுந்திரபாண்டி தலைமையில், புதிய பேருந்து நிலையம் முன்பு டி.எஸ்.பி. நடவடிக்கையை கண்டித்து மறியல் போராட்டம் நடத்த திரண்டனர்.
தகவலறிந்த, காவல் உதவிஆய்வாளர் ர. சிலுவை அந்தோணி தலைமையில் போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மீண்டும் விளம்பரப் பதாதைகள் வைத்து கொள்ள அனுமதியளிக்கப்பட்டதை அடுத்து அதிமுகவினர் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தான் பந்துவீச்சு: ஆஸி. அணியில் அறிமுகமான யு19 வீரர் ஆலிவர் பீக்!

பார்ட்னர்ஷிப்பில் வரலாறு படைத்த ஷுப்மன் கில் - சாய் சுதர்சன்!

மணிப்பூர் புதிய டிஜிபி ஜூன் 1இல் பொறுப்பேற்பு

கடவுள்களின் ஆடுகளம்... செயலிழந்த எரிமலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து திடல்!
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


