அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!
/

மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி வருகை: ஊராட்சி சபைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

Updated On :25 பிப்ரவரி 2019, 9:58 am IST

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் திங்கள்கிழமை காலை 8 மணியளவில் தூத்துக்குடி வருகிறார். அவருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையிலும், வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையிலும் விமான நிலையத்தில் வைத்து வரவேற்பு அளிக்கப்படுகிறது.
தொடர்ந்து, சவலாப்பேரி கிராமத்துக்குச் செல்லும் ஸ்டாலின், உயிரிழந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுகிறார். பின்னர்,  காலை 10 மணியளவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில், ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட செக்காரக்குடி கிராமத்தில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டத்திலும், கூட்டுடன்காடு கிராமத்தில் நடைபெறும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதைத்தொடர்ந்து, மாலை 4 மணியளவில் விளாத்திகுளம் ஒன்றியம், வேம்பார் தெற்கு ஊராட்சியில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் ஸ்டாலின், பின்னர், விளாத்திகுளம் பேரவைத் தொகுதிக்கான வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குகிறார். பின்னர், அங்கிருந்து கார் மூலம் மதுரை விமான நிலையம் சென்றடைகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.