வாணியர் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 15 ஆம் தேதி சென்னை சேப்பாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வாணியர் பேரவையின் நிறுவனத் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்தப்பேட்டி: வாணியர் சமுதாய மக்கள் பொருளாதாரத்திலும், கல்வியிலும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். வாணியர் சமுதாயத்தை அரசு கண்டுகொள்வதில்லை. அரசு உயர் பதவிகளுக்கு வாணியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் தேர்வு செய்யப்படுதில்லை. எங்கள் சமுதாய இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் பெயரை கோவை விமான நிலையத்துக்கு சூட்ட வேண்டும். கேரளத்தில் உள்ள கண்ணகி கோயில்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். வாணியர் செட்டியாரின் குலத் தொழிலான செக்கு தொழில் பிற சமுதாயத்துக்கு சென்றுவிட்டது. ஆகவே, வாணியர் சமுதாயத்தை மேம்படுத்தும் வகையில் நல வாரியம் அமைக்க வேண்டும்.
கண்ணகிக்கு மதுரையில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 15 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு வாணியர் பேரவை, வாணியர் இளைஞர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கு வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
அப்போது, வணிக வைசிய சங்கச் செயலர் பழனிகுமார், துணைச் செயலர்கள் வேல்முருகன், மணிமாறன், இளைஞரணி பொருளாளர் மாதவராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து, நடைபெற்ற வாணியர் இளைஞர் பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு வாணியர் பேரவை நிறுவனத் தலைவர் பங்கேற்றுப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







