ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

தூத்துக்குடி மறை மாவட்ட  ஆயர் பொறுப்பேற்பு

தூத்துக்குடி மறை மாவட்ட கத்தோலிக்க ஆயராக ஸ்டீபன் அந்தோணி ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார். 

Updated On :25 பிப்ரவரி 2019, 10:02 am IST

தூத்துக்குடி மறை மாவட்ட கத்தோலிக்க ஆயராக ஸ்டீபன் அந்தோணி ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார். 
கத்தோலிக்க கிறிஸ்தவ தூத்துக்குடி மறை மாவட்ட ஆயராக இருந்த இவோன்அம்புரோஸ் உடல்நிலை காரணமாக பணியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, புதிய ஆயராக வேலூர் மறை மாவட்டத்தில் பணியாற்றிய ஸ்டீபன்அந்தோணி நியமனம் செய்தார். தூத்துக்குடிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த ஆயர் ஸ்டீபன்அந்தோணியை பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்து அலங்கரித்த வாகனத்தில்ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
ஊர்வலம் தூத்துக்குடி திரு இருதயங்களின் பேராலய வளாகத்தில் நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்போஸ்தலிக்க பரிபாலகரான முன்னாள் ஆயர் இவோன்அம்புரோஸ் புதிய ஆயர் ஸ்டீபன் அந்தோணிக்கு திருநிலைப்படுத்தி பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிறப்பு திருப்பலி நடைபெற்றது. 
விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, அதிமுக மாவட்டச் செயலர் சி.த. செல்லப்பாண்டியன், தமிழகம் முழுவதும் இருந்து கத்தோலிக்க கிறிஸ்தவப் பேராயர்கள், தூத்துக்குடி மாநகர கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.