சாத்தான்குளத்தில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சியதாக 20 மின் மோட்டார்களை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
சாத்தான்குளம் பேரூராட்சிப் பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 3பிரிவுகளாக பிரித்து இரண்டு நாள்களுக்கு ஒரு முறை என ஒன்றரை மணி நேரம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சுவதால் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பவர்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லையென புகார் எழுந்தது. இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜன் தலைமையில், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் ராஜாசுந்தர் ஆகியோர் பேரூராட்சிப் பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது மின் மோட்டார் பயன்படுத்தி குடிநீர் உறிஞ்சியதாக 20 மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







