15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

தூத்துக்குடியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 25) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

Updated On :24 ஜனவரி 2019, 1:09 am IST

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 25) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பேச்சியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜன. 25) காலை 10.30 மணியளவில் தூத்துக்குடி ஆசிரியர் காலனி முதல் தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.
முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதியுடைய பதிவுதாரர்கள், தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது சுய விவரம் மற்றும் கல்விச் சான்றுகளுடன், முகாமில் கலந்துகொள்ளலாம்.  மேலும் விவரங்களுக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.