/

மது விற்பனை: 5 பேர் கைது; 84 மதுபாட்டில்கள் பறிமுதல்

கோவில்பட்டி மற்றும் கழுகுமலையில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த

Updated On :23 ஜனவரி 2019, 5:56 am IST

கோவில்பட்டி மற்றும் கழுகுமலையில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த 84  மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். 
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் அரிகண்ணன் தலைமையில் போலீஸார் திங்கள்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போது, மார்க்கெட் சாலையில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட செல்லப்பாண்டியன் நகரைச் சேர்ந்த வெள்ளப்பாண்டி மகன் காந்தாரியை(24) கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த 5 மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.500ஐ பறிமுதல் செய்தனர்.  கழுகுமலை காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி தலைமையில் போலீஸார் திங்கள்கிழமை ரோந்து சென்றபோது,  காளவாசல் பேருந்து நிறுத்தம் அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட திருவேங்கடம் வட்டம், ஆத்திப்பட்டி நெசவாளர் காலனியைச் சேர்ந்த கணபதி மகன் சங்கரவேலை(55) கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த 47 மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.500, கழுகுமலை பழந்தோட்டம் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட திருவேங்கடம் வட்டம், புதுக்குளம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த சுடலைமாடன் மகன் கணேசமூர்த்தியிடம்(28) இருந்த 23 மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.400,  கழுகுமலை பழங்கோட்டை சந்திப்பு அருகே அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட சங்கரன்கோவில் வட்டம், களப்பாங்குளம் மேலத் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் அழகையாவை(60)  கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த 4 மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.500  மற்றும் கழுகுமலை புதிய பேருந்து நிலையம் அருகே அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட தெற்கு கழுகுமலை வடக்குத் தெருவைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் மாரியப்பனை(42) கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த 5 மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.200-ஐ பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.