சாத்தான்குளம் அருகே மூதாட்டியிடம் 7.5 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பூச்சிக்காடு ஆர்.சி கோயில் தெருவைச் சேர்ந்த ஜேசுமரியான் மனைவி தெரசம்மாள் (75). இவர் புதன்கிழமை பூச்சிக்காடு விலக்கில் உள்ள தங்களது தோட்டத்து வாயிலில் நின்றாராம். அப்போது அடையாளம் தெரியாத நபர் வந்து, அவரிடம் தனக்கு வாழை இலை தேவைப்படுகிறது எனக் கூறி தெரசம்மாள் வைத்திருந்த அரிவாளை கேட்டுள்ளார். அவர் அரிவாளை கொடுத்ததும், தெரசம்மாள் வேறு பக்கம் திரும்பியபோது அவரது கழுத்தில் அணிந்திருந்த 7.5 பவுன் நகையை பறித்துக் கொண்டு அந்த நபர் தலைமறைவாகிவிட்டாராம். புகாரின்பேரில் தட்டார்மடம் போலீஸார் வழக்குப் பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









