தமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூக ஊடகப் பிரிவு தொடக்கம்

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூக ஊடகப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா.

Updated On :23 ஜனவரி 2019, 5:59 am IST

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூக ஊடகப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் செய்துவரும் சிறப்பான வேலைகளில் சில நிகழ்வுகள் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரியவருகிறது.  சில நிகழ்வுகள் பொதுமக்களின் கவனத்துக்கு வருவதில்லை. 
ஆகவே, பெரும்பாலான பொதுமக்கள் அறியவேண்டும் என்பதற்காக சமூக ஊடகப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.  சார்பு ஆய்வாளர் சத்திய நாராயணன் தலைமையில் காவலர்கள் முத்துமாரியப்பன்,  ரகுபதி மற்றும் அருண்ராஜ் ஆகியோரை கொண்டு இந்தப் பிரிவு செயல்படும்.
 தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் இரவு,  பகல் பாராமல் பொதுமக்களின் நன்மைக்காக பாடுபடும் காவல்துறையினரின் அரிய செயல்களை பொதுமக்களுக்கு வாட்ஸ் ஆப்,  முகநூல் மற்றும் இதர ஊடகங்கள் மூலமாக இந்தப் பிரிவினர் வெளிப்படுத்துவார்கள். 
அதேபோல, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வாட்ஸ் ஆப் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன.  அந்தக் குழுக்கள் காவல் நிலையத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளை பதிவிடுவார்கள்.  இந்தப் பிரிவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய வாட்ஸ் ஆப் குழுக்களுடன்,  தங்களை இணைத்துக்கொண்டு மாவட்டத்தின் மொத்த தகவல்களை சேகரித்து வெளியிடுவார்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.