நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

விளாத்திகுளம் கோயிலில் திருட்டு

விளாத்திகுளம்  மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை  திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On :23 ஜனவரி 2019, 5:55 am IST

விளாத்திகுளம்  மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை  திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இக்கோயிலில் கடந்த 17ஆம் தேதி வருஷாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவில் கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோயில் பிரகாரத்தில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றனர்.  கோயில் இரவு காவலாளி ஆவுடையப்பன் அதிகாலையில் கண்விழித்து பார்த்த போது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக கோயில் காவலாளி ஆவுடையப்பன் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீஸார் வழக்குப் பதிந்து, கோயில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.