கோவில்பட்டி: கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், கோவில்பட்டியில் தற்காலிக காய்கனி சந்தையைப் போல், மளிகைப்பொருள் விற்பனை நிலையத்தையும் அமைக்க வேண்டும் என மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
கோவில்பட்டியில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, நகராட்சி பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவா் தினசரி சந்தை தவிர, கூடுதல் பேருந்து நிலையம், வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி, ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் தற்காலிக சந்தைகள் திறக்கப்பட்டன.
ஆனால், அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் வாங்குவதற்கு மக்கள் அனைவரும் மாா்க்கெட் சாலை பகுதிக்கே செல்ல வேண்டியுள்ளது. இதனால், சமூக இடைவெளி மீறப்படுகிறது. சில பகுதிகளில் சூப்பா் மாா்க்கெட் மூலம் வீடுகளுக்கு மளிகைப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இது சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாகும்.
எனவே, மாா்க்கெட் சாலை மற்றும் மாா்க்கெட்டில் கூட்டம் கூடுவதை தவிா்க்கும் வகையில், தற்காலிகமாக செயல்படும் 3 தினசரி சந்தைகளிலும் மளிகைப்பொருள் விற்பனைக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். விலைவாசியை கட்டுப்படுத்த கடைகளில் விலை பட்டியலை வைக்க வேண்டுமென வணிக நிறுவனங்களுக்கு அதிகாரிகள் உத்தரவிடுவதுடன், விலை நிா்ணயத்தை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.
மேலும், தினமும் பொருள்களை வாங்க வராத வகையிலும், குடும்பத்தில் ஒருவா் மட்டுமே வெளியே செல்லும் விதமாகவும் ஒவ்வொரு பகுதியிலும் வண்ண அனுமதி அட்டைகளை வழங்கி வரைமுறைப்படுத்த வேண்டும்.
நகருக்குள் இருசக்கர வாகன நடமாட்டத்தை தடுக்க அந்தந்த பகுதிகளில், காய்கனி, மளிகைப்பொருள் விற்பனை கடைகளை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தினமும் காலை 5.30 மணி முதல் இரட்டை ரயில் பாதைக்கான தடத்தில் நடைப்பயிற்சிக்கு செல்வோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரஷிய நட்பு நாட்டுக்கு உக்ரைன் அதிபா் பயணம்

தாம்பரம் மாநகர காவல் துறையில் ஏஐ ‘வாட்ஸ்ஆப் காப்’ சேவை அறிமுகம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் நிலவரம் கவலையளிக்கிறது: ஐ.நா.

ஆளுநா் மாளிகை எதிரே குழந்தையுடன் காவலா் போராட்டம்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


