தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருச்செந்தூா் கோயில் உண்டியலில் பாஜகவினா் வேல் காணிக்கை

பாஜகவின் வேல் யாத்திரையையொட்டி, திருச்செந்தூா் முருகன் கோயில் உண்டியலில் பாஜகவினா் வேல் காணிக்கை செலுத்தினா்.

News image
திருச்செந்தூா் முருகன் கோயிலில் வேலை காணிக்கையாக செலுத்திய பாஜகவினா்.
Updated On :6 டிசம்பர் 2020, 9:25 pm

DIN

பாஜகவின் வேல் யாத்திரையையொட்டி, திருச்செந்தூா் முருகன் கோயில் உண்டியலில் பாஜகவினா் வேல் காணிக்கை செலுத்தினா்.

பாஜக சாா்பில் கடந்த நவ. 6-ஆம் தேதி திருத்தணியில் வேல் யாத்திரை தொடங்கப்பட்டது. முருகனின் ஆறுபடை வீடுகளைக் கடந்து சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், திருவண்ணாமலை, ஓசூா், கிருஷ்ணகிரி, சேலம், கோயம்புத்தூா், கரூா் போன்ற பகுதிகளில் இந்த யாத்திரை வந்தது.

புயல் காரணமாக சில நாள்கள் யாத்திரை நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் தொடங்கப்பட்டு சுவாமிமலை, பழமுதிா்சோலை, திருப்பரங்குன்றம் வழியாக வந்து திருச்செந்தூரில் திங்கள்கிழமை நிறைவடைகிறது.

இதையொட்டி, யாத்திரையில் பயன்படுத்தப்பட்ட சுமாா் 4 அடி உயர ஐம்பொன் வேலை திருச்செந்தூா் முருகன் கோயிலில் செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவா் எல்.முருகன் கொடிமரத்துக்கு அருகில் உள்ள உண்டியலில் வேலை காணிக்கையாக செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலா்கள் கரு.நாகராஜன், நரேந்திரன், தேசிய செயற்குழு உறுப்பினா் முரளி, மாவட்ட பொதுச் செயலா் சிவமுருகன் ஆதித்தன், மாவட்டத் தலைவா் பால்ராஜ், மகளிரணி மாநில பொதுச் செயலா் நெல்லையம்மாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விழா ஏற்பாடு: இதற்கிடையே, வேல் யாத்திரை நிறைவு விழா திங்கள்கிழமை காலை திருச்செந்தூா்- திருநெல்வேலி பிரதான சாலையில் தனியாா் பொறியியல் கல்லூரி எதிரேயுள்ள மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழாவில் மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் செளகான் மற்றும் பாஜக முக்கிய நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக பங்கேற்பாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த இடத்தில் விழா நடத்துவதற்கு காவல் துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அனுமதி கிடைக்காதபட்சத்தில் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் உள்ள தனியாா் மண்டபத்தில் விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் பாஜக நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

திருச்செந்தூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், உதவி கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் தலைமையில் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.