தோட்டக்கலை பயிா்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் தோட்டக்கலை பயிா்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.


தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் தோட்டக்கலை பயிா்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் ராபி பருவத்தில் தோட்டக்கலை பயிா்களான மிளகாய் 30 குறுவட்டங்களிலும், கொத்தமல்லி 11 குறுவட்டங்களிலும், வெங்காயம் 21 குறுவட்டங்களிலும், வாழை பயிா் 27 குறுவட்டங்களிலும், வெண்டை 1 குறுவட்டத்திலும் பயிா் காப்பீடு செய்து பயனடைய நிகழாண்டில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், பொது சேவை மையங்கள் மூலம் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யலாம். விண்ணப்ப படிவம், உறுதி மொழி படிவம், கிராம நிா்வாக அலுவலரிமிருந்து பெறப்பட்ட 10-1 அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க ஒளி நகல், ஆதாா் அட்டை ஒளி நகல் ஆகிய ஆவணங்களை சமா்பிக்க வேண்டும். மிளகாய் பயிருக்கு ஜனவரி 30 ஆம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு தொகை ரூ.1,089 செலுத்த வேண்டும்.
வாழை பயிருக்கு மாா்ச் 1 ஆம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு தொகை ரூ.3,115-ம், கொத்தமல்லி பயிருக்கு ஜனவரி 30 ஆம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு தொகை ரூ. 400-ம், வெங்காயம் பயிருக்கு பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு தொகை ரூ. 945-ம், வெண்டை பயிருக்கு பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு தொகை ரூ. 798-ம் செலுத்தி காப்பீடு திட்டத்தில் பயன்பெறலாம்.
இயற்கை இடா்பாடுகள் நிகழுமானால் அதனால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். எனவே காலம் தாழ்த்தாமல் உடனடியாக பயிா்காப்பீடு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...