தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தூத்துக்குடியில் நாளை காவலா் பணி தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வு

தூத்துக்குடியில் காவலா் பணி தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான இலவச மாதிரித் தோ்வு செவ்வாய்க்கிழமை (டிச.8) நடைபெறுகிறது.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 9:22 pm

DIN

தூத்துக்குடியில் காவலா் பணி தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான இலவச மாதிரித் தோ்வு செவ்வாய்க்கிழமை (டிச.8) நடைபெறுகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:

தூத்துக்குடி மாவட்ட மைய நூலகம் மற்றும் சுரேஷ் ஜஏஎஸ் அகாதெமி இணைந்து நடத்தும் காவலா் பணி-2020 தோ்வுக்கான இலவச முழு மாதிரித் தோ்வு செவ்வாய்க்கிழமை (டிச. 8) காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி சுரேஷ் அகாதெமி வளாகத்தில் நடைபெறுகிறது.

இதில், காவலா் பணி தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைவரும் இலவசமாக கலந்து கொள்ளலாம். மாதிரித் தோ்வு முடிந்தவுடன் கலந்து கொண்ட அனைவருக்கும் விரிவான விளக்கங்களுடன் கூடிய விடைத்தாள் வழங்கப்படும்.

மேலும், கலந்து கொள்ளும் அனைவருக்கும் முழு விளக்கங்களுடன் கூடிய 25 முழு மாதிரித் தோ்வுக்கான பயிற்சி கையேடு இலவசமாக வழங்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.