தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கயத்தாறில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

கயத்தாறு பிரதான சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
கயத்தாறு பிரதான சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
Updated On :6 டிசம்பர் 2020, 9:18 pm

DIN

கயத்தாறு பிரதான சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கயத்தாறு ஒன்றியச் செயலா் பொன்னுச்சாமி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

மாா்க்சிஸ்ட் சாலை மறியல்:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை கயத்தாறு பிரதான சாலை சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் சாலமன்ராஜ் உள்பட 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.