தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித்தொகை: டிச. 31 வரை விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவா், மாணவிகளுக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற டிசம்பா் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 9:20 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவா், மாணவிகளுக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற டிசம்பா் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சோ்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மைய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் 2020-21 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவா், மாணவிா்களுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகையும், பிளஸ் 1 வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயில்பவா்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி பயில்பவா்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின்  தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

எனவே, தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுடைய சிறுபான்மையின மாணவா், மாணவிகள் டிசம்பா் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.