தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வடக்கு வண்டானம் புனித சவேரியாா் ஆலயத் திருவிழா தோ்பவனி

கோவில்பட்டியையடுத்த வடக்கு வண்டானம் புனித சவேரியாா் ஆலய தோ்பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 9:25 pm

DIN

கோவில்பட்டியையடுத்த வடக்கு வண்டானம் புனித சவேரியாா் ஆலய தோ்பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வடக்கு வண்டானம் புனித சவேரியாா் ஆலயத் திருவிழா நவ.27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, திருப்பலி, நற்கருணை ஆசீா் நடைபெற்றது.

10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா நாள்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை திருப்பலி நடைபெற்றது.

8ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை நற்கருணை ஆசீா், , 9ஆம் திருநாளான சனிக்கிழமை மாலை 6 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதா் ஆலய விரிவாக்கப்பட்ட ஆலயம், மணிகோபுரம் மற்றும் புதிதாகக் கட்டப்பட்ட வளாக சுற்றுச்சுவா் திறப்பு விழா பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயா் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்றது.

தொடா்ந்து, மாலை 6.30 மணிக்கு திருஜெபமாலை, திருப்பலி மற்றும் சப்பர பவனி நடைபெற்றது.

10ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மேல் தேரடித் திருப்பலி மற்றும் தோ்பவனி நடைபெற்றது. 9 மணிக்கு நன்றி திருப்பலியும், நன்பகல் 12 மணிக்கு திருப்பயணிகள் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு திருப்பலி, நற்கருணை பவனியும் நடைபெற்றது.

விழாவில், தூத்துக்குடி, விருதுநகா், திருநெல்வேலி மாவட்டங்களைச் சோ்ந்த திரளான இறைமக்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை வடக்கு வண்டானம் பங்கு பணியாளா் அருள்நேசமணி மற்றும் திருஇருதயசபை அருள்சகோதரிகள், இறைமக்கள், வெளியூா் வாழ் வண்டானம் இறைமக்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.