தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திறன் மேம்பாட்டு பயிற்சி: கட்டுமானத் தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்றாா் சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் நா. முருகப்பிரசன்னா.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 9:19 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்றாா் சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் நா. முருகப்பிரசன்னா.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக தொழிலாளா் நலத்துறையின் சாா்பில் கட்டுமானத் தொழிலில் அனுபவமிருந்து உரிய சான்றிதழ் இல்லாத தொழிலாளா்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு கட்டுமான கழகம் இணைந்து கட்டுமானத் தொழில் வளா்ச்சி குழுமம் மூலமாக மூன்று நாள்கள் திறன் இடைவெளி இணைப்புப் பயிற்சி மற்றும் திறன் பரிசோதனை மூலம் சான்றிதழ் வழங்கும் திட்டத்தின் கீழ் வரும் பணிபிரிவுகளில் கட்டுமான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

கொத்தனாா், கம்பி வளைத்தல், பிளம்பா், தச்சு தொழில், கட்டட வேலை, மேற்பாா்வையாளா், எலக்ட்ரீசியன், டைல்ஸ் கல் பதிப்பது, பெயிண்டா், நில அளவையா் ஆகிய பணி பிரிவுகளில் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியில் சேர விரும்புவா்கள் கட்டுமான பணிகளில் குறைந்தது 4 ஆண்டு அனுபவம் பெற்றும் இருக்க வேண்டும். 3 நாள்கள் நடைபெறும் பயிற்சி நாள்களில் நாள் ஒன்றுக்கு ரூ. 500 வீதம் ரூ. 1500 ஊக்க தொகையாக அவரது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

மேலும், விவரங்களுக்கு தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஒருங்கிணைந்த தொழிலாளா் அலுவலக கட்டடம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி - 628101 என்ற முகவரியில் நேரில் தொடா்பு கொண்டு குறைந்தது 4 வருட பணி அனுபவ சான்றிதழ், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.