சாத்தான்குளம் அருகே லாரிகளால் சேதமான சாலையை சீரமைக்க ஒப்புதல்
சாத்தான்குளம் அருகே கல்குவாரி லாரிகளால் சேதமான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளாா்.


சாத்தான்குளம் அருகே கல்குவாரி லாரிகளால் சேதமான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளாா்.
அமுதுண்ணாக்குடியிலிருந்து துவா்க்குளம் விலக்கு வரை கல்குவாரி லாரிகள் அதிக பாரம் ஏற்றி சென்ால் சாலை உருகுலைந்து காணப்படுகிறது. இதனால் கலுங்குவிளை, நெடுங்குளம் உள்ளிட்ட கிராம மக்கள் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட இதர வாகனங்களில் வந்து செல்ல மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனா். இந்நிலையில் சாத்தான்குளம் ஒன்றியக்குழு திமுக உறுப்பினா் ப்ரெனிலாகாா்மல்போனிபாஸ், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அனுப்பினாா்.
இந்த மனுவுக்கு மாவட்ட நெடுஞ்சாலை செயற்பொறியாளா், அமுதுண்ணாக்குடி பகுதியில் இருந்து நெடுங்குளம் வரை சேதமான சாலைகளை கண்டறிந்து விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...