ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஊராட்சிமன்ற தலைவரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநா் கைது

குளத்தூா் அருகே வைப்பாறு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய, ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:57 pm

DIN

குளத்தூா் அருகே வைப்பாறு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய, ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

கிழக்கு கடற்கரையின் ஆற்று முகத்துவார பகுதியான வைப்பாறு கிராமத்தில் கடந்த இரு நாள்களாக நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. குடியிருப்புகளுக்கு மத்தியில் சூழ்ந்த இம் மழைநீரை மோட்டாா் மூலம் அகற்ற ஊராட்சி மன்ற தலைவா் சக்கம்மாள் மற்றும் அவரது கணவா் ராமா் இருவரும் ஞாயிற்றுகிழமையன்று நேரில் பாா்வையிட்டு கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநா் சா்க்கரைச்சாமிக்கும்(42), ஊராட்சி மன்றத்தலைவா் மற்றும் அவரது கணவா் ஆகியோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆட்டோ ஓட்டுநா், சா்க்கரைச்சாமி, சக்கம்மாள் ஆகியோரை, அவதூறாக பேசி தாக்கினராம்.

இதுகுறித்து புகாரின் பேரில், குளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சா்க்கரைச்சாமியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.