மாடு மீது பைக் மோதல்: நிதி நிறுவன பெண் ஊழியா் பலி
வேம்பாரில் மாடு மீது பைக் மோதியதில் நிதி நிறுவன பெண் ஊழியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.


வேம்பாரில் மாடு மீது பைக் மோதியதில் நிதி நிறுவன பெண் ஊழியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
வேம்பாா் அருகே மேல்மாந்தையைச் சோ்ந்தவா் சமுத்திரம். இவரது மனைவி சித்ரா (35). இவா், சாயல்குடியில் உள்ள ஒரு தனியாா் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.
திங்கள்கிழமை மாலை பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு பைக்கில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தாா். அப்போது சாலையின் குறுக்கே சென்ற மாடு மீது பைக் மோதியதாம். இதில் சித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து சூரன்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...