மண் வள அட்டை இயக்கத்தில் விவசாயிகள் சேர அழைப்பு
மண் வள அட்டை இயக்கத்தில் விளாத்திகுளம் வட்டார விவசாயிகள் சேரலாம் என வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.


மண் வள அட்டை இயக்கத்தில் விளாத்திகுளம் வட்டார விவசாயிகள் சேரலாம் என வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குநா் நாகராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
விவசாயத்தில் அதிக மகசூல் பெற மூலகாரணமாக அமைவது மண் வளம். இதை அடிப்படையாகக் கொண்டு, மாநில அரசு மத்திய அரசு உதவியுடன் மண் வள அட்டை இயக்கம் என்ற திட்டம் அமலில் உள்ளது.
2020-2021ஆம் ஆண்டு திட்டத்தின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் 4,394 மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மண் ஆய்வு செய்து, மண் வள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. மண்ணின் கார அமில நிலை, உப்பின் நிலை, பயிருக்கு தேவையான பேரூட்டச் சத்துக்களாகிய தழை, மணி, சாம்பல் சத்துக்களும், நுண்ணூட்டச் சத்துக்களாகிய இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு, காப்பா் போன்ற சத்துக்கள் பயிருக்கு முறையாக மண்ணில் தேவையான அளவு உள்ளதா என அறிந்து விவசாயிகளுக்கு உரம் பரிந்துரைக்கப்படுகிறது.
இதனால் விவசாயிகள் தங்களுடைய மண்ணின் தன்மையை முறையாக தெரிந்துகொண்டு தேவைக்கேற்ற உரங்களை மட்டும் நிலத்திற்கு இட்டு விவசாயம் செய்ய முடியும். தற்போது நவீன தொழில்நுட்பத்தில் சொட்டுநீா்ப்பாசனம், தெளிப்புநீா்ப்பாசனம் முறையாக கையாள்வதினால் குறைந்தளவு தண்ணீரில் அதிகமான பரப்பளவில் சாகுபடி செய்யவும், அதிக மகசூல் பெறவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், மண்ணிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் 5ஆம் தேதி உலக மண் வள தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்களுக்கு மண்ணை பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்துதல், மண்ணைப் பாதுகாக்க நிலையான முதலீட்டை ஏற்படுத்துதல், புதுவிதமான வழிமுறைகளை முன்னெடுத்து வளமான மண்ணை நலமான மண்ணாக மாற்றுதல், விவசாயிகளுக்கு தங்கள் நிலத்தினுடைய வளத்தைப் பற்றிய விவரங்கள், எவ்வளவு உரங்கள், எந்தந்த பயிருக்கு எவ்வளவு இட வேண்டும் என்பன உள்ளிட்ட விவரங்கள் மண் வள அட்டையில் குறிப்பிடப்பட்டு வழங்கப்படுகிறது. எனவே, விவசாயிக வேளாண்மைத் துறை பரிந்துரை பெற்று விவசாயப் பணிகளில் ஈடுபட முன்வர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...